Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர்”…. கலைஞர் கருணாநிதி ஏன் கொண்டாடப்படுகிறார் தெரியுமா?…. !!

இந்திய அரசியல் தமிழ்நாடு அரசியல் வேறுபட்டு தான் எப்போதும் காணப்படுகிறது. மற்ற மாநிலங்களில் தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால் தமிழக அரசியலில் மட்டும்தான் தலைவர்கள் உருவாவார்கள். அப்படி ஒருவர் தான் முத்துவேல் கலைஞர் கருணாநிதி. பெரியாரின் ஈரோட்டு பள்ளியில் பகுத்தறிவு பழகி, பெரியார் அண்ணாவின் காஞ்சி கல்லூரியில் திராவிடத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் சுழன்று தமிழகத்தின் முதல்வராக உயர்ந்தவர். இதனால்தான் அவரை கவிஞர் வாலி பெரியார், அண்ணா முழங்கை என்றால் கலைஞர் கருணாநிதி முழு கை என்று புகழ்ந்தார். அதனைத் தொடர்ந்து பராசக்தி படம் அனைவரும் அறிந்தது தான். அது இந்த சமூகத்தில் எவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது பலருக்கும் தெரியும். அதற்கு முக்கிய காரணம் கலைஞரின் எழுத்துக்கள் தான் என்பதை யாராலும் மறக்க முடியாது இதனை தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் வாரியம் அமைத்தது, பொதுவுடமை ஆக்கியது என கலைஞர் பல வித்தைகள் மிக வீரியமானது ஆகும். எம்ஜிஆர் பிரிந்து கலைஞரை 10 வருடங்களுக்கும் மேலாக முதல்வர் நாற்காலியை தொட விடாமல் செய்ததால் எதிர்க்கட்சி தலைவராக கருணாநிதி செயலாற்றிய விதம் எல்லாருக்கும் இல்லாத குணம்.

அவரது ஆட்சிக் காலத்தில் 1996-2001 ஆட்சி காலம் மிக முக்கியம். அந்த ஆட்சி காலத்தில்தான் தமிழக நவீனமாக ஆரம்பித்தது. நவீனம் என்பது ஆடம்பரமாக இருக்கக்கூடாது அவசியமானதாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, அந்த 5 ஆண்டுகளும் தமிழகத்தை பல அசரவைக்கும் திட்டங்களை மேற்கொண்டார். அதாவது 340 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா உயிரி, தொழில்நுட்பவியல் பூங்கா, சென்னைக்கு மேம்பாலங்கள், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவம், பொறியியல் கல்லூரி, உலகம் இனி கம்ப்யூட்டர்கள் தான் இருக்க போகிறது என்பதை உணர்ந்து பள்ளிகளில் கணினி அறிவை பரவலாக சேர்த்து என பல திட்டங்களை ஆட்சிக்காலத்தில் செய்திருந்தார். இருப்பினும் அடுத்த தேர்தலில் மக்கள் அனைவரும் தோல்வியே பரிசாக கொடுத்தனர். மேலும் பலரும் சில விஷயங்களுக்காக விமர்சிக்கலாம். ஆனால் அந்த ஜனநாயகத் தன்மையை கற்றுக்கொள்ளுவதிலும் சரி ஆட்சியிலும் சரி பரவலாக தூவியவர் கலைஞர் கருணாநிதி என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பல சீர்த்திருத்த முற்போக்கு கையெழுத்து போட்டவர். கருணாநிதி அவரது கையெழுத்து தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியுள்ளது.

Categories

Tech |