பீகார் மாநிலத்தில் சரியாக பணி செய்யாததால் 5 காவலர்களை எஸ்பி ஒருவர் சிறையில் அடைத்த சம்பவம் நடந்துள்ளது. நாவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளரான கௌரவ மங்ளா கடந்த எட்டாம் தேதி நகர காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வழக்கு புத்தகத்தில் பெரும்பாலான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்ததால் சரியாக பணி செய்யாத சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் என ஐந்து பேரை சிறையில் வைத்து அடைத்துள்ளார்.
சப் இன்ஸ்பெக்டர்கள் சத்ருகன் பஸ்வான், ராம்ரேகா சிங், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ் பவன், சஞ்சய் சிங், ராமேஷ்வர் உரான் ஆகிய 5 பேரையும் காவல் நிலையத்தில் இருந்த லாக்-அப்பில் தள்ளி கதவை பூட்டினார்.பின்னர் அதிகாலை ஒரு காவலரை அனுப்பி அவர்களை அனைவரையும் லாக்-அப்பில் இருந்து விடுவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.