கொரோனா பாதித்த நோயாளி ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹொங்ஹொங் என்ற நகரில் லி வான் கியூங் என்ற 63 வயதான நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குயின் எலிசபெத் என்ற மருத்துவமனையில் டிசம்பர் 14ஆம் தேதி தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனை ஆடைகளுக்கு மேல் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு மாடிப்படி வழியாக தப்பியோடியுள்ளார்.
பின்னர் இரு நாட்கள் கழித்து மோங் ஹோக் என்ற மாவட்டத்தில்உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்ததாக லி வான்னை காவல்துறையினர் பிடித்து மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இவரிடம் காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினால் அவர்களுக்கு 5000 டாலர் அபராதமும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்க நேரிடும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.