Categories
தேசிய செய்திகள்

தபால் நிலைய சேமிப்பு திட்டம்….. ஜூலை 1 முதல் வட்டி விகிதம் உயர்வு?…. வெளியான ஜாக்பாட் தகவல்…..!!!!

தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் அபரிதமான வருமானத்தை தர உள்ளது. அதாவது ஜூலை 1 முதல் மத்திய அரசு தனது PPF மற்றும் சுகன்யா சம்ரிதி போன்ற சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு காலாண்டு தொடங்குவதற்கு முன்பும் சேமிப்புத் திட்டங்களில் வட்டி வீதங்களை மதிப்பாய்வு செய்து மத்திய நிதியமைச்சகம் அறிவிக்கும்.

அதன்படி வருகின்ற ஜூலை 1 முதல் அரசின் சேமிப்பும் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளது. அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பல்வேறு வங்கிகளில் டெபாசிட் மீதான வட்டி வீதங்களை உயர்த்தி வருகின்றன.இந்நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் போஸ்ட் ஆபீஸில் பணம் போட்டுள்ளவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |