Categories
தேசிய செய்திகள்

தன் காதலை நிரூபிக்க… சிறுமி எடுத்த விபரீத முடிவு… ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்கள்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவி ஒருவர் தன் காதலை நிரூபிப்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ரியா. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதை அடுத்து தன் காதலை அந்த இளைஞனிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞன் நீ என்னை உண்மையில் காதலிக்கிறாய் என்றால் விஷம் குடிப்பாயா? என்று கேட்க அந்த சிறுமியும் விசத்தை குடித்துள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்த பெற்றோர் அந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அந்த சிறுமி வீரியமிக்க விஷத்தை குடித்துள்ளதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பெற்றோர்கள் மிகவும் கதறி கதறி அழுதனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உள்ள இளைஞர்கள், பெண்கள் ஒருதலைக்காதல் காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இது ஒரு கோழைத்தனமான செயல். நம் வாழ்வில் சாதிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கும் நேரத்தில் இதுபோன்ற ஒரு தலை காதலின் காரணமாக இளம் வயதில் தங்களின் உயிரை விடுவது சரியல்ல என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |