பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் சில ஆண்டுகளுக்கு முன்னதாக மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டார். இதையடுத்து அவர் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட்டதோடு, தன்னை போன்று மனஅழுத்தத்தினால் மனநல பாதிப்பால் விபரீத முடிவுகளில் ஈடுபடுவோரை தடுக்கும் அடிப்படையில் லைவ்லவ் லாப் எனும் அமைப்பினை பெங்களூரு ஒடிசாவில் துவங்கினார். இந்த அமைப்பினை தமிழகத்திலும் கொண்டு வருவதற்கு தீபிகா படுகோன் திட்டமிட்டார். அந்த வகையில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஈக்காட்டிலுள்ள வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்துடன் இணைந்து மனநலத் திட்டத்தை லைவ் லவ் லாப் செயல்படுத்தி உள்ளது.
அதன்பின் ஈக்காட்டுக்கு வந்த அவர் மன நலம் பாதித்தோரின் பராமரிப்பாளர்களிடம் பேசினார். இது தொடர்பாக தீபிகா பேட்டி அளித்தபோது “மன நோயால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கை மற்றும் அவர்களை பராமரிப்போரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். என் தனிப்பட்ட பயணத்தில்கூட பராமரிப்பாளரின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். இதன் காரணமாக தான் என் அம்மா இங்கே இருக்கிறார்.
அத்துடன் அதனால்தான் என் சகோதரி மிக ஆர்வமாக இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் என்னையே எடுத்துக்கொண்டால் என் தாயும், பராமரிப்பாளரும் எனது மனநல பாதிப்பின் அறிகுறிகளை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கவில்லை எனில், இன்று என் நிலைமை என்னவாக இருக்கும். பொதுவாக மனநோயாக இருந்தாலும் (அல்லது) வேறு எந்தவகை நோயாக இருந்தாலும் அது உடனிருந்து கவனிக்கும் பராமரிப்பாளரையும் பாதிக்கிறது” என்று அவர் கூறினார்.