Categories
மாநில செய்திகள்

“தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டாம்”….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!

இந்தியாவில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தன்னை நேரில் வந்து சந்திப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

தொண்டர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவதை தொண்டர்கள் வழங்கும் சிறப்பு புத்தாண்டு பரிசாக்கும். மேலும் ஒமைக்ரா ள்ன் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக திமுக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |