Categories
அரசியல்

தனுஷ் மரணம் தாளவியலாத கொடுமை…. தொல் திருமாவளவன் இரங்கல்…!!!

மேட்டூர் அருகே உள்ள கூழியுரைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது மாணவன் தனது பள்ளிப்படிப்பை 2019ஆம் வருடம் முடித்த நிலையில் இரண்டு முறை நீட் தேர்வை எழுதி இருக்கிறார். அந்த இரண்டு முறையும் அவர் தோல்வியடைந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார். இருப்பினும் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து தனுஷின் மறைவிற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட துயரம் தாளவியலாத கொடுமை. ஏற்கனவே இரு முறை தேர்ச்சி பெற்றும் மருத்துவம் பயில இடம்பெறவில்லை. இம்முறையும் இடம் கிடைக்காமல் போனால் என்ன செய்வது? என்று அஞ்சி மன அழுத்தத்திற்கு ஆளாகி பலியாகியிருக்கிறார். இது போன்று ஒரு மரணம் இனி நடந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |