தனுஷ் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்து பிரபல நடிகை பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார். தற்பொழுது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். மேலும் இவர் தற்பொழுது பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் தி கிரேமேன் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார்.
இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதை பார்த்த நடிகை ராதிகா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.