Categories
சினிமா

தனுஷ் நடிக்க ‘கேப்டன் மில்லர்” படம்…. வெளியான ஃபர்ஸ்ட் லுக்…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகங்களைக் கொண்டுள்ளார். இவர் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள “திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகன் நடிக்க உள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த படம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |