Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ்-செல்வராகவன் நடித்துள்ள நானே வருவேன்”…. வெளியான மிரட்டலான டீசர்…!!!!!

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடிக்கிறார். இத்திரைப்படத்தை எஸ் தாணு தயாரிக்கின்றார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ்.

இந்நிலையில் இத்திரைப்டத்தின் டீசர் நேற்று வெளியாகி உள்ளது. டீசரை பார்த்த ரசிகர்கள் தனுஷ் கலக்கி இருப்பதாகவும் செல்வராகவனின் தோற்றமும் வெறித்தனமாக இருப்பதாக கூறி வருகின்றார்கள். மேலும் சென்ற மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் பார்த்த அப்பாவி தனுஷா இவர் என ஆச்சரியமாக இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இப்படம் இம்மாதம் திரையரங்கில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |