நடகர் தனுஷின் நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் பிரம்மாண்ட திரைப்படம் “கேப்டன் மில்லர்”. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் அண்மையில்தான் துவங்கியது. இவற்றில் தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
தற்போது அந்த படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல OTT நிறுவனமான அமேசான் பிரைம் ரூபாய். 38 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறதாம். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் மாவீரன் படத்தையும் அமேசான் பிரைம் ரூபாய்.34 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.