Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ்” இப்படியா சொன்னாரு…? மனம் திறந்த “பிரபல நடிகர்”… என்னனு பாருங்க….!!

தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷாலை நடிகர் தனுஷ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் விஷ்ணுவிஷால் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து ராட்சசன் உட்பட பல தரமான படங்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவரே தயாரித்த FIR என்னும் படத்தில் நடித்த விஷ்ணு விஷாலை நடிகர் தனுஷ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

அதாவது FIR படத்தை பார்வையிட்ட நடிகர் தனுஷ் ராட்சசன் படத்தை விட இதில் மிக சிறப்பாக நடித்துள்ளாய் என்று விஷ்ணு விஷாலை பாராட்டியுள்ளார். இதற்கிடையே இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வழங்கி பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |