இயக்குனர் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி 17-ஆம் தேதி இருவரும் பிரிவதாக தனித்தனியாக இணையத்தில் அறிவித்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இச்செய்தியை அறிந்த ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் கூடிய விரைவில் சேர்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஐஸ்வர்யா தனுஷ் உடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டாலும் தனுஷ் ஒப்புக்கொள்ளாமல் இருக்கின்றார். தனுஷ் தற்போது நானே வருவேன், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
இதைப்போல ஐஸ்வர்யாவும் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவர் செய்யும் செயல்களை இன்ஸ்டாவில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். நேற்று முன்தினம் கேமராவுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். இந்நிலையில் நேற்று காலையிலேயே தனது குழுவுடன் ஷூட்டிங்கில் இருப்பதாக பதிவிட்டிருக்கிறார். ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இத்துடன் கையில் மைக்குடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார். அப்புகைப்படத்திற்கு பேக் கப் சொல்கிறோம் என கேப்ஷன் வைத்திருக்கின்றார். இதற்கு ரசிகர்கள் பாசிட்டிவான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.