Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வைரல்”…. ஆடி வெள்ளி விரதம் ஒர்க்அவுட் ஆயிடுச்சு போல….!!!!!!!

தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தார் பலரும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. ரஜினி, ஐஸ்வர்யா மீது கோபம் கொண்டதால் மனமிறங்கி தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால் தனுஷ் உன்னை போல் என்னால் உடனடியாக முடிவை மாற்றிக்கொள்ள முடியாது எனக்கு சிறிது காலம் வேண்டும் என கூறிவிட்டார். இதனால் ஐஸ்வர்யாவும் அவரின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.

இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியனரின் மூத்த மகன் யாத்ரா ஸ்போர்ட்ஸ் டீம் கேப்டன் ஆகி இருக்கின்றார். இதற்கான விழாவில் தனுஷும் ஐஸ்வர்யாவும் பங்கேற்று இருக்கின்றனர். அவர்களுடன் பாடகர் ஜேசுதாஸ் குடும்பமும் பங்கேற்றிருக்கின்றது. தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்த பிறகு முதல் முறையாக மகனுக்காக ஒன்று சேர்ந்து எடுத்த இந்த போட்டோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வெள்ளிக்கிழமை விரதம் வொர்க் அவுட் ஆயிடுச்சு போல என கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |