ரஜினியின் 169 வது படத்திற்கு பிறகு நெல்சன், தனுஷுடன் இணைய இருப்பதாக தகவல் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் வெற்றி பெறாததால் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றார். தனுஷ் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் தனுஷ், நெல்சன் உடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகின்றது. நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து விஜயை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் ரஜினி வைத்து அடுத்ததாக இயக்க இருக்கும் திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்து இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது.
பீஸ்ட் படத்தை நெல்சன் சொதப்பியதால் ரஜினி நெல்சனுடன் பணியாற்ற யோசிப்பதாக கூறப்பட்டு வருகின்றது. ஆனால் இதெல்லாம் வெறும் வதந்தி தான் என பலரும் கூறி வருகின்றார்கள். இந்நிலையில் நெல்சன் தனுசுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இத்திரைப்படம் ரஜினியின் 169 திரைப்படத்தை இயக்கிய பிறகே உருவாகும் என பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.