பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கிஅட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் “வாத்தி” ஆகும். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்க உள்ள இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்திற்கு தெலுங்கில் “சார்” எனவும் தமிழில் “வாத்தி” எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கு விதமாக “வாத்தி” திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் இப்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷின் பிறந்தநாள் விருந்தாக ரசிகர்களுக்கு இந்த படத்தின் டீசர் இன்றுமாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.