Categories
சினிமா

தனுஷின் ஹாலிவுட் படம்…. வெளியான சண்டை காட்சி வீடியோ…. வைரல்….!!

தமிழ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவருக்கு இளம்பெண்கள், ஆண்கள் என ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது ஹாலிவுட் “தி கிரே மேன்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர். அதனைதொடர்ந்து இதில் தனுசுடன் கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் ரயன் காஸ்லிங் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் 2009ஆம் ஆண்டு வெளியான “தி கிரே மேன்” என்ற நாவலை தடவி அதே தலைப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்து வருகிறது.

வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் தி கிரே மேன் படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இந்தியா வருகை வரவிருப்பதாக நேற்று வீடியோ பதிவின் மூலம் அறிவித்தனர். இந்நிலையில் “தி கிரே மேன்” படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷின் சண்டை காட்சி இயக்குனர் சகோதரர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் ஹாலிவுட் நடிகர்களை தனுஷ் அடிக்கும்படியாக அமைந்திருக்கும் இந்த வீடியோ ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

https://twitter.com/i/status/1546650635721797632

Categories

Tech |