தனுஷ் ஐஸ்வர்யாவின் மூத்த மகனான யாத்ரா ரஜினியை உரித்து வைத்திருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் கழித்து கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்ர். இந்நிலையில் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் நேற்று சென்னையில் இளையராஜாவின் ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் தனுஷின் மூத்த மகனான யாத்ரா தாத்தா ரஜினிகாந்தை உரித்து வைத்திருப்பதாக கூறுகின்றனர். யாத்ரா வைப் பார்த்தால் ரஜினியின் சிறுவயது தோற்றம் போல் இருப்பதாகவும் கூறுகின்றனர் குறிப்பிடத்தக்கது.