‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
Excited !@dhanushkraja @theVcreations @thisisysr @Arvindkrsna pic.twitter.com/hUasL5RuFb
— selvaraghavan (@selvaraghavan) June 23, 2021
வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவலை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.