தனுஷின் திரைப்படங்களை தயாரிக்க வேண்டாம் என லதா ரஜினிகாந்த் தயாரிப்பாளர்களிடம் கூறி வருகின்றாராம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. இவர்கள் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிவதாக அறிவித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. லதா ரஜினிகாந்த், தனுஷை வைத்து யாரும் படத்தை தயாரிக்க வேண்டாம் என அவருக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களை தொடர்புகொண்டு கூறி வந்ததாக முன்பாக ஒரு தகவல் வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு செய்தி வந்து இருக்கின்றது. அது என்னவென்றால் கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் அன்புச்செழியன். இவர் தன் மகள் சுஷ்மிதாவின் கல்யாணத்துக்கு அழைப்பதற்காக ரஜினியின் வீட்டிற்குச் சென்று இருக்கின்றார்.
லதா ரஜினிகாந்திடம் இவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுது லதா தன் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் வாழ்க்கை குறித்து கூறி வருத்தப்பட்டிருக்கின்றார். அன்புச்செழியன், லதாவிற்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். லதா ரஜினிகாந்த் மேலும் தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு கால் செய்து தனுஷின் திரைப்படங்களை யாரும் தயாரிக்க வேண்டாம் என கூறியிருக்கின்றார். இந்நிலையில் தனுஷுக்கு தற்பொழுது நடிக்கும் திரைப்படங்களை தவிர புதிதாக திரைப்படங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு என கூறி வருகின்றனர். தனுஷ் ஐஸ்வரியா விவாகரத்து குறித்து அறிவித்ததிலிருந்தே இது போன்ற செய்திகள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.