Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷின் திருச்சிற்றம்பலம் செப் 23ஆம் தேதி முதல்…..” வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!!

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற 23ஆம் தேதி சன் நெக்ஸ்ட் இணையத்தில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது.

இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் நடிகர் தனுஷ் இருந்தார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்திரனின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை மிகவும் நம்பி இருக்கின்றார் தனுஷ்.

இந்த நிலையில் யாரடி நீ மோகினி எனும் வெற்றி படத்தை இயக்கிய மித்ரன் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலமாக ஏழு வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த  இந்த படம் சென்ற ஜூலை 18 திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி சன் நெக்ஸ்ட்-டில் பார்த்து மகிழலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

Categories

Tech |