நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு முதன் முதலில் கர்ணன் என டைட்டில் வைக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முதன்முதலில் இந்த படத்திற்கு பாண்டிய ராஜாக்கள் என டைட்டில் வைக்கப்பட்டதாக இந்த படத்தின் கலை இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கர்ணன் என்ற தலைப்புக்கு பல பிரச்சினைகள் வந்த நிலையில் பாண்டியராஜாக்கள் என டைட்டில் வைத்திருந்தால் கண்டிப்பாக இந்த படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்திருக்கும் என கூறப்படுகிறது.