Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளி பாதுகாப்பு விதிகளில் குளறுபடி?… கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு…..!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து பள்ளிக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் பள்ளி வளாகம் தீக்கிரையாகியது. அதன்பின் பள்ளி கட்டிடத்தை கல்வி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது பள்ளியின் மொட்டை மாடிக்கு செல்லும் வழி அடைக்கப்படாமல் திறந்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பள்ளி வளாகத்தின் உரிய இடங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாதது, பள்ளிகளுக்கான விதிகளை சரியாக பின்பற்றாதது என பல குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது தனியார் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தின் அடிப்படையில் பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் தங்கும் அறைகள் இருக்ககூடாது. எனினும் கள்ளக்குறிச்சி பள்ளியில் வகுப்பறை கட்டிடத்திலேயே விடுதி இருந்தது தெரியவந்தது. இதனால் இதனை அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு மேற்கொள்ள தவறியது ஏன்..? என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி பள்ளி வளாகத்தில் முக்கிய இடங்களில் கேமரா பொருத்தப்படாமல் இருந்ததையும், அதனை பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் விட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆகவே வரக்கூடிய காலங்களில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தனியார் பள்ளிகள் அனைத்திலும் மீண்டுமாக உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு மேற்கொள்ள முதன்மைகல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் செயல்படும் “ரெசிடென்ஷியல் ஸ்கூல்” எனப்படும் உறைவிட பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தரவும் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |