Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை….. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவருடைய பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இந்நிலையில் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் தெரிவித்ததாவது இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமூக விரோதிகள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பள்ளிக்குள் புகுந்து பள்ளி வாகனங்களை தீயிட்டுள்ளனர்.

ஏறக்குறைய பள்ளிக்கு 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து நாளை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளது .பள்ளிகள் நடக்காது என்று தெரிவித்தனர். இந்நிலையில் தனியார் பள்ளிகள் இதுபோல விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்க அதிகாரி தெரிவித்ததாவது: “உள்ளூர் விடுமுறை விடும் அதிகாரம் மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இருவருக்கு மட்டும் உள்ளது.

பேரிடர் காலங்கள், ஊர் திருவிழாக்கள் போன்றவற்றை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால் தனியார் பள்ளிகள் சங்கங்கள் தங்களாகவே பள்ளிக்கு விடுமுறை விட்டுக் கொள்வது, சட்ட விதிமுறையை மீறும் செயல். நாளை தனியார் பள்ளிகள் விடுமுறை விட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சட்ட விதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்” என தெரிவித்துள்ளது.

Categories

Tech |