Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு….. அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்…..!!!!

தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையில் ஈடுபட கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “தனியார் பள்ளிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இன்றைய காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்த 5 ஆண்டு காலத்திற்குள் அரசு பள்ளிகளில் அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தப்படும். இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க வருகிறபோது கட்டணக் கொள்ளையில் ஈடுபட வேண்டாம். உங்களுடைய கல்வி பணி என்பது சமுதாயத்திற்கு மிகவும் வேண்டிய ஒரு பணியாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |