Categories
மாநில செய்திகள்

தனியார் நிறுவனங்களிலும் தமிழருக்கே வேலை….. பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு வேலை என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் புலம்பெறாத வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்வது தடுக்கப்படும். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

அதேபோல் தமிழக அரசு பணிகளில் வெளி மாநிலத்தவர் சேர்வதை தடுக்க மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவை நடத்தும் போட்டி தேர்வுகளிடம் தமிழ் மொழித் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும். அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் தனியார் வேலைகள் தமிழர்களுக்கு என்று உறுதி சட்டம் இயற்ற வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Categories

Tech |