Categories
மாநில செய்திகள்

தனியார் துறை வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு….. கோரிக்கை வைத்த தமிழ்நாடு அரசு….!!!!

தனியார் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அரசு துறையில் மட்டுமே இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ள நிலையில் தனியார் துறையில் எந்தவிதமான இட ஒதுக்கீடும் இல்லை. திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் திட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |