கேரளாவில் பெண் ஒருவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார்.
கேரளா எர்ணாகுளம மாவட்டத்தில் Mulanthuruthy ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸில் பெண் ஒருவர் ஏறியுள்ளார். அவர் வேலை செய்வதால் ஆலப்புழா செல்வதற்காக ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் ரயில் பெட்டியில் இருந்த ஒரு ஆண் பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரை கழிவறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மேலும் அவரின் தங்க நகைகளையும் பறிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் தன்னை காத்துக் கொள்ள அந்தப் பெண் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். அதன் பின் அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் தப்பாக நடக்க முயன்றவரின் பெயர் Bijukuttan என்றும் அவர் ஆலப்புழாவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் பல திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் தலைமறைவான தொடர்ந்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.