Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தனியாக சமைக்க தொடங்கிய மகன்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பகுதியை  சேர்ந்தவர்கள் மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் தற்போது மூத்த மகன் திருமணம் ஆகி பெற்றோருடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் சென்னையில் வேலை செய்து வருகிறார் .

பல நாட்களாக கூட்டுக்குடும்பமாக இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில் மூத்த மகன் திடீரென தனியாக சமையல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தாய் மீனாட்சி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |