தம்பதியினரை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பகுதியில் தட்சணாமூர்த்தி- விசாலாட்சி தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் 3- தேதி மர்ம நபர்கள் இவர்களின் வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். அதன் பிறகு தம்பதியினரை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 1/2 வெள்ளி, 2 1/2 லட்சம் ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தட்சிணாமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மாத்தூர் விளக்கு பகுதியிலுள்ள போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர்களிடம் தங்க நகை இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு வாலிபர்களும் அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் மற்றும் அசோக் என்பதும், தட்சணாமூர்த்தியின் வீட்டில் கொள்ளையடித்து சென்றது இவர்கள்தான் என்பதும் தெரியவந்துள்ளது. அதன் பிறகு அசோக், மகேஷ் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மஞ்சுளா, அசோக் குமார், ராமு, சுராஜ் , உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.