Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுமி…. அத்துமீறி நுழைந்த வாலிபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பனைமடல் பகுதியில் தனபால்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு தனபால் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவியின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் தனபாலை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தனபாலுக்கு 5,000 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |