Categories
சினிமா தமிழ் சினிமா

‘தனிமையில் இருப்பதே பேரின்பம்’… செல்வராகவனின் வைரல் டுவீட்…!!!

இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் கடந்த 2003-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனுஷ்- செல்வராகவன் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்திற்கு நானே வருவேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இன்னொருவர் இருந்தால் தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி’ என பதிவிட்டுள்ளார் ‌. தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |