இலங்கையில் உள்ள தனிமைப்படுத்த முகாமில் இருந்து வீட்டிற்கு திரும்பிய சிலர் வழியில் மதுபானம் அருந்தி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது
இலங்கையில் உள்ள கண்டக்காடு பகுதியில் கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் வீடு திரும்பிய குழு ஒன்று செல்லும் வழியில் பேருந்தை நிறுத்தி மதுபானம் குடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இவர்கள் கம்பஹா எனும் இடத்தை நோக்கி பயணித்த போது இடையில் பேருந்தை நிறுத்தி மதுபானம் அருந்தியதாக கம்பஹா மாவட்ட சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அதோடு மதுபோதையில் அவர்கள் பேருந்தில் தகராறு செய்ததாகவும் கூறப்படுகின்றது. இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளும் ராணுவத்தினரும் கம்பஹா மாவட்ட செயலாளரிடம் தகவல் தெரிவித்து நிலைமையை கட்டுப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.