EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை செய்திகள் EPFO வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. எனினும் சென்ற சில தினங்களில் மோசடி வழக்குகள் வேகமாக அதிகரித்துள்ளது. தொலைபேசி, சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் ஆகியவற்றின் வாயிலாக EPFO உறுப்பினர்களிடம் இருந்து பான், ஆதார், யுஏஎன், வங்கிக்கணக்கு மற்றும் ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை இபிஎஃப்ஓ ஒருபோதும் கேட்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூகஊடகங்கள், வாட்ஸ்அப் ஆகியவற்றின் வாயிலாக எந்தவொரு சேவைக்கும் (அ) வேறு எதற்கும் எந்த விதமான பணத்தையும் டெபாசிட் செய்ய EPFO கேட்காது என எச்சரித்துள்ளது. எனவே EPFO உறுப்பினர்களும் அத்தகைய அழைப்பு (அ) வாட்ஸ்அப் அழைப்புக்கு பதிலளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். EPFO உறுப்பினர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12% இபிஎப்ஓ கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோன்று அடிப்படை சம்பளத்தில் 12% முதலாளி வழங்கவேண்டும். இந்த 12 சதவீதத்தில் 2 பகுதிகள் இருக்கிறது. 12 சதவீதத்தில் முதல் பகுதியான 8.33 % ஊழியர் ஓய்வூதியக் கணக்கிற்கும் (இபிஎஸ்) மீதம் உள்ள 3.67 % தொகை EPFO கணக்கிற்கும் செல்கிறது. பணி ஓய்வு பெறும் போது இத்தொகையை பெறுவதற்கான விதிமுறை இருக்கிறது. எனினும் பணி ஓய்வுக்கு முன்னரும், தேவைப்பட்டால் இத்தொகையை எடுத்துக்கொள்ளலாம்.