நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய தமிழ் படத்திற்கு 10 கோடி சம்பளத்தை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய கதாநாயகிகள் பட்டியலில் முன்னிலை வகுத்து வருபவர் நடிகை நயன்தாரா. இவரது படங்கள் நல்ல வசூல் குவித்து வருவதால் ஒவ்வொரு படத்திலும் இவர் சம்பளத்தை அதிகரித்து வருகின்றார். சில வருடங்களுக்கு முன்பு வரை 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியவர் அதன் பின் 5 கோடியாக உயர்த்தினார். இறுதியாக 6 கோடி முதல் 7 கோடி வரை வாங்கி வந்திருந்தார். தற்போது இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடிப்பதனால் சம்பளத்தை மேலும் அதிகரித்து இருக்கின்றார். கடந்த வருடம் ரூபாய் 10 கோடி சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
தற்போது அவர் நடிக்கும் புதிய தமிழ் படத்திற்கு 10 கோடி சம்பளத்தை உறுதி செய்திருப்பதாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்திற்கு அன்னபூரணி என்ற பெயரை வைக்கப்பட குழுவினர் பரிசீலிப்பதாகவும் ஓட்டல் தொழில் செய்யும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் திருமணத்திற்கு பின் நயன்தாரா மார்க்கெட் உயர்ந்து வருவது சக நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது.