19வயது சீரியல் நடிகை நேஹா தனக்கு தங்கை பிறந்திருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடிகை ராதிகாவுக்கு மகளாக தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நேஹா . தற்போது இவர் சித்தி 2 மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜாக்சன் துரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் நடிகை நேஹா ‘விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்கிறேன்’ என தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
#PandiyanStores fame Neha's mother gives birth to a girl child . . 😍😍😍 pic.twitter.com/XlXTuiqguY
— Viral Briyani (@Mysteri13472103) March 23, 2021
இந்நிலையில் 19 வயது நடிகை நேஹா தனது அம்மாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நேஹா ‘எனக்கு ஒரு அன்பு தங்கை பிறந்திருக்கிறாள். அனைவரும் என் தங்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும். உங்களது ஆசிர்வாதம் அவளுக்கு தேவை’ என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் சிலர் இதை விமர்சித்ததையடுத்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘இந்த செய்திக்கு கிடைக்கும் குப்பை பதிலுக்கு நான் எதுவும் செய்யப்போவதில்லை. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்’ என்று கூறியுள்ளார்.