பிரிட்டன் இளவரசர் ஹரி, தாத்தாவின் இறுதிச்சடங்கிற்கு பின் தந்தை மற்றும் சகோதரருடன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரிட்டன் வந்த இளவரசர் ஹரி தன் தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் சுமார் இரண்டு மணி நேரங்கள் பேசியுள்ளார். இதற்கு முன்பே சகோதரர் வில்லியமிற்கு இளவரசர் ஹரி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தாத்தாவின் இறுதி சடங்கிற்கு பிறகு சகோதரர் மற்றும் தந்தையுடன் பேசிய இளவரசர் ஹரி, அமெரிக்காவிற்கு உடனடியாக திரும்பப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இளவரசர் ஹரி நினைத்த நேரத்தில் அமெரிக்காவிற்கு திரும்பும் வகையில் டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 21ஆம் தேதியன்று மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாள் வருகிறது. அதாவது இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியாரின் திருமணத்திற்கு பின்பு முதன் முதலாக, இளவரசர் பிலிப் இல்லாத பிறந்தநாளை மகாராணி எதிர்கொள்கிறார். இதனால் அன்றைக்கு பாட்டியுடன் இருப்பது அவருக்கு ஆறுதலை தரும் என்று ஹரி நினைத்துள்ளார். எனவே பாட்டியை சந்தித்துவிட்டு தான் அமெரிக்காவிற்கு செல்வார் என்று கூறப்படுகிறது.