Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியார் பற்றி பேசி தெறிக்க விட்ட சிறுவர்-சிறுமிகள்…. முதல்வர் பாராட்டு…. வைரல் வீடியோ…..!!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் வேடத்தில் சிறுவர்கள், பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்..? கடவுள் மறுப்பு அவரது கொள்கையா..? மதத்தை தூக்கி எறியச் கூறியது ஏன்..? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நடித்து அசத்தினர். மேலும் சிறுமி பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க பெரியார் மேற்கொண்ட போராட்டம் தொடர்பாகவும் இந்த நிகழ்ச்சியில் பேசினார். இதற்கான வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமுதாய விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது, தந்தை பெரியார் பெயரல்ல கருத்தியல், தலைமுறைகள் கடந்து மானுடச் சமுதாயம் பகுத்தறிவோடும், சுயமரியாதையோடும் வாழ்வதற்கான வழிகாட்டி கொள்கை உரத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பெரியார் பிஞ்சுகளை வாழ்த்தி மகிழ்ந்தேன். இது பெரியார் மண்… கலைக்கு இடமுண்டு… களைகளுக்கு அல்ல.. என குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |