சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்க முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சூரியநகரம் கிராமத்தில் சீனிவாசா ஆச்சாரி என்பவரது பெயரில் 97 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தெக்கலூர் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரது மனைவி பாரதி வாங்க இருந்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சூரிய நகரம் கிராமத்தில் சீனிவாசா ஆச்சாரி என்பவரது பெயரில் உள்ள நிலத்தை வாங்குவதற்காக 2 பேர் வந்தனர். அப்போது சார்பதிவாளர் அஷ்வினி அங்கு வந்த நபரின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்துள்ளார். அப்போது அந்த நபரிடம் சார்பதிவாளர் அஷ்வினி உங்கள் பெயர், தந்தை பெயர் என்ன? என கேள்வி கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் தன்னுடைய பெயர் சீனிவாசா ஆச்சாரி என்றும், தனது தந்தை பெயரை சொல்ல தயங்கியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பின்னால் இருந்தவர் சீனிவாசா ஆச்சாரியின் தந்தை பெயரை கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சார்பதிவாளர் அஷ்வினி அந்த நபரின் கைரேகையை பரிசோதித்த போது ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சார்பதிவாளர் அஷ்வினி திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள் நடமாட்டம் செய்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் காசிநாதபுரம் பகுதியில் வசிக்கும் சரவணன், மற்றொருவர் ராணிப்பேட்டை நெமிலி சைனபுரம் பகுதியில் வசிக்கும் மோகன் என்பதும் தெரியவந்துள்ளது. மவளும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்க முயன்ற 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.