மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினராக பவுலின் சோபியா ராணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் திருச்சியை சேர்ந்த 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த 2 வருடங்களாக அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணி புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியின் தந்தை அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.