Categories
மாநில செய்திகள்

“தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியே” உங்கள் சொற்படி நடப்பதால் வெல்கிறேன்…. முதல்வரின் நெகிழ்ச்சி பதிவு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுக கட்சியின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கட்சித் தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5-து ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய தந்தையின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய தந்தையை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தந்தையே! முதல்வர்களில் மூத்தவரே! கலை உலக வேந்தரே! எங்களின் உயிரே! உணர்வே! தாங்கள் வகித்த திமுக தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு அடியும் நீங்கள் அமைத்த படியில் தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |