திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரம் அருகிலுள்ள சில்வார்பட்டியில் பொன்னுசாமி(34) என்பவர் வசித்து வருகிறார்.. அவருடைய ஒன்றரை வயது குழந்தை சாதனா. கடந்த 10 ஆம் தேதி காலை பொன்னுசாமி தனது குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது அதை ஊரைச் சேர்ந்த விவசாய ராஜேந்திரன்(45) என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக பொன்னுச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னுசாமியும் சாதனம் கீழே விழுந்தனர். அப்போது குழந்தை சாதனா மட்டும் காரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். பொன்னுச்சாமி காயத்துடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அப்போது இறந்து போன குழந்தை உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பொன்னுச்சாமி போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் “தனக்கும் காரை ஓட்டி வந்த ராஜேந்திரனுக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் தான் அவர் என்னையும் எனது குழந்தையை கொலை செய்யும் நோக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேண்டுமென்று காரை மோதச்செய்தார். எனது குழந்தை பலியாகிவிட்டது. என்று தெரிவித்திருந்தார் இதனையடுத்து இந்த விபத்து வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். மேலும் தலைமறைவான ராஜேந்திரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.