ஐ.டி நிறுவன ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரில் சக்கரை தங்கம்(61) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திக் கண்ணன்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ. டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் கண்ணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் குடிப்பழக்கம் காரணமாக கார்த்திக்கின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மதுபோதையில் வந்த கார்த்திக் தங்கத்தின் சட்டையை பிடித்து தகராறு செய்து அவரை தாக்க முயன்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த தங்கம் கார்த்திக்கின் கழுத்தில் கிடந்த துண்டை பிடித்து இழுத்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அப்படியே கார்த்திக்கை படுக்கை அறையில் படுக்க வைத்துள்ளார். இதனையடுத்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த கார்த்திக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.