Categories
தேசிய செய்திகள்

“அப்பா என்னோட பந்து” எடுக்க சென்ற குழந்தை…. பின்னர் நேர்ந்த சோகம்…!!!

புதுச்சேரியை அடுத்த பொம்மையார் பாளையம் பகுதியில் நாராயணி ஹவுஸ் என்ற தனியார் சொகுசு பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களாவில் வேலை செய்து வருபவர் அருணகிரி நாதன். இவர் தனது மூன்று வயது மகளை தன்னுடன் அந்த சொகுசு பங்களாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற குழந்தை பங்களாவில் உள்ள நீச்சல் குளத்திற்கு அருகில் பந்து ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது பந்து நீச்சல் குளத்தில் விழுந்து உள்ளது. அந்த பந்தை எடுக்க முயன்ற போது குழந்தை நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |