தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்து கொண்டிருந்த நான், ஐ.நா.வில் உரையாற்றுகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்..
ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.. அவர் ஆற்றிய உரையில், ஐ.நா. சபையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள். எங்களது பன்முகத்தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம்.. பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தை சேர்ந்த நான் ஐநாவில் பேசுகிறேன். தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்து கொண்டிருந்த நான், ஐ.நா.வில் உரையாற்றுகிறேன். நூறு ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கொடிய கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.
கடைக் கோடி மக்களைச் சென்றடையும் வகையிலான பல்வேறு திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது. ஏழை மக்களுக்கு வீடுகள் மற்றும் மருத்துவ காப்பீடு போன்றவற்றை இந்திய அரசு அளித்து வருகிறது. நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றார்..