Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தந்தைக்கு கொரோனா… மாடிக்கு சென்ற மகன்… திரும்பி வரவே இல்ல… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தாம்பரத்தில் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் சானடோ ரியம், தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியில் 56 வயதுடைய சம்பத் குமார் என்பவர் வசித்துவருகிறார். திருமணமாகாத அவர் வேலை கிடைக்காததால், தனது வயதான பெற்றோரை கவனித்து வந்துள்ளார். அவரின் தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சம்பத் குமார் நேற்று முன்தினம் காலையில் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது மோட்டார் சுவிட்ச் போட்டுவிட்டு விட்டு மாடிக்குச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.

அதனால் வீட்டில் இருந்தவர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடியுள்ளனர். இதனையடுத்து நேற்று மதியம் வீட்டின் முன்னர் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளனர். அந்தப் பதிவில், மாடிக்கு சென்ற சம்பத்குமார், மாடியில் இறங்கி வெளியே செல்லவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு குடும்பத்தினர் வீடு முழுவதும் தேடி விட்டு மாடிக்குச் சென்று தண்ணீர் தொட்டியை பார்த்துள்ளனர். அங்கு சம்பத்குமார் தண்ணீர் தொட்டியில் மூழ்கி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பத்குமார் அவரே தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை யாராவது தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |