Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் விநியோகம் செய்த வாலிபர்… மின்மோட்டாரால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்மோட்டாரை இயக்கி கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள பட்டதையன்குட்டை கிராமத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டல், டீக்கடை உள்ளிட்ட கடைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் துரைராஜ்க்கு உதவியாக அவரது மகன் அரவிந்தன் இருந்து வந்தார். இதனையடுத்து சம்பவத்தன்று அரவிந்தன் தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் ஆட்டோ மொபைல் கடை ஒன்றில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாரதவிதாமாக அரவிந்தன் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்து மயக்கமடைந்த அரவிந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அரவிந்தன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நல்லிபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |