Categories
பல்சுவை

தண்ணீர் குடிக்க சென்ற யானையை…. சீண்டி பார்த்த முதலை…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!!

விலங்குகளின் வீடியோக்களுக்கு என்று சமூகவலைத்தளத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக யானைகள் செய்யும் பல்வேறு வேடிக்கையான மற்றும் அழகான செயல்களை நாம் பார்த்துள்ளோம். தற்போது அதுபோன்று ஒரு யானையின் வீடியோவானது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் யானை கூட்டம் தண்ணீர் குடிப்பதற்காக செல்கிறது.

அதில் ஒரு யானை தண்ணீர் குடிக்க துவங்கியபோது, முதலை ஒன்று அதன் தும்பிக்கையை அழுத்தி பிடித்துக்கொள்கிறது. இதன் காரணமாக கடுப்பான யானை, முதலையை அதனுடைய தும்பிக்கையோடு சேர்த்து சுற்றிக்கொண்டதோடு, கால்களால் முதலையை நசுக்க முயன்றது. இதுகுறித்து வீடியோ லேட்டஸ்ட் சைட்டிங்ஸ் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |