Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய தலைப்பாலம்…. தவிக்கும் பழங்குடியின மக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…..!!!!

தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மொக்கை மேடு, ஆளூர் வயல் மற்றும் காந்த வயல் போன்ற  பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நூலையில் பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் லிங்காபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

இதனால் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருவதோடு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து அவசர தேவைக்காக சிலர் பரிசில் மூலமாக ஆற்றைக் கடந்து செல்கின்றனர். இதேபோன்று ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும் போதும்  தலைப்பாலம் தண்ணீரில் மூழ்குவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |